பாதாள உலக உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: சிக்கவுள்ள இலங்கையில் தேடப்படும் நபர்கள்
Sri Lanka Police
Law and Order
By Kanooshiya
வெளிநாடுகளில் உள்ள மேலும் 35 பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய சர்வதேச காவல்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் வுட்லர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கைது
அதன்படி, வெளிநாட்டில் இருக்கும் 70 பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு சர்வதேச காவல்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சர்வதேச காவல்துறை மூலம் இலங்கையில் தேடப்பட்டு வரும் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
