செங்கடலில் தொடரும் பதற்றம்: கொழும்பு துறைமுகத்தில் வந்து குவியும் கப்பல்கள்
                                    
                    Port of Colombo
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Ship
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார்.
செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வருடத்தின் கடந்த 29 நாட்களில் 330 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
கொள்கலன் நடவடிக்கை
அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 29 நாட்களில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான டெர்மினல்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட கொள்கலன் நடவடிக்கைகளின் கொள்ளளவு கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 60.9% அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        