குறைவடையும் பேருந்து கட்டணங்கள் - வெளியான மகிழ்ச்சி தகவல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 20 சதவீதம் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை, டயர் மற்றும் பேட்டரி விலை உள்ளிட்ட 12 விடயங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணக்குறைப்பு

கடந்த கொரோனா காலத்தில் பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைகளுக்கமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட 20 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு மேலதிகமாக 10 சதவீதம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய, 30 சதவீதமாக காணப்படுகின்ற குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS
6ம் ஆண்டு நினைவஞ்சலி