மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
Ministry of Education
Sri Lankan Schools
National Health Service
By Sumithiran
மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட "வேலைத்திட்டங்கள்" தவிர மற்றைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
புத்தக பையினால் முதுகு தண்டு கோளாறு
பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் மாணவர்களுக்கு முதுகுத்தண்டு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில்
எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி