வட்டி வீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: நம்பிக்கை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கை மத்திய வங்கி நான்காவது தடவையாகவும் கொள்கை வட்டி வீதத்தை குறைத்துள்ளதன் மூலம் இந்நாட்டில் வளமான பொருளாதாரத்திற்கு வழிவகுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி வைப்பு வட்டி வீதத்தை 9% ஆகவும் கடன் வட்டி வீதத்தை 10% ஆகவும் குறைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையானது கடுமையான பொருளாதாரப் படுகுழியில் மூழ்கி, பணவீக்க விகிதத்தில் உலகில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்ற நிலையிலேயே கொள்வனவுகளை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மத்திய வங்கி வட்டி வீதங்களை முன்னர் உயர்த்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பணவீக்கம்
அதன்போது, கடன் வட்டி விகிதம் 6% இல் இருந்து 16% ஆகவும், 5% வைப்பு வட்டி விகிதம் 15% ஆகவும் உயர்த்தப்பட்டது.
ஆனால் இன்று அரசின் நிதிக் கொள்கை முடிவுகளால் 70% என்ற அளவில் இருந்த பணவீக்கம் 1.3% ஆகக் குறைந்துள்ளது. இதனால் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |