மரநடுகை வாரம்: றீ(ச்)ஷாவால் தமிழர் பகுதியில் வழங்கி வைக்கப்பட்ட கறுவா கன்றுகள்!
கிளிநொச்சி இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னராக கடந்த 03 நாட்களும் வடக்கின் பல பகுதிகளில் மரக்கன்றுகள் விநியோகிப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில்
அந்த வரிசையில் இன்றைய தினம் (24) கிழக்கு மாகாணத்தில் கறுவாக் கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
அதன் முதற்கட்டமாக, திருகோணமலை நிலாவெளி பகுதியில் கறுவாக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து திருகோணமலை தம்பலகாமம் பகுதியிலும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலும் கறுவாக் கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
“ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த செயற்றிட்டத்தில் இதுவரை, கிளிநொச்சி மருதுநகர், பன்னங்கண்டி, அக்கராயன், கிளிநொச்சி, மருதங்கேணி ஆகிய பகுதிகளில் இதுவரை கருவாக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.