றீ(ச்)ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
விளையாட்டு ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியில் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.
ஆண்களுக்கு 15 கிலோமீற்றர் தூரமும், பெண்களுக்கு 10 கிலோமீற்றர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.500 நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சீருடை வழங்கப்படும். போட்டியுடன் தொடர்புடைய மேலதிக விபரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |