சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
வவுனியாவில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமையில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு
நிறுவனத்தில் இருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதுடன் ஒரு சில நாட்களில் அது சீராகும் என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மாதாந்த விலைத் திருத்தத்திற்கு அமைய பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாயாகவும் 05 கிலோ கிராம் சிலிண்டர் 1,482 ரூபாயாகவும் 02.3 கிலோ கிராம் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - கபில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |