பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு ஆளுநருக்கு ஐ.நா சனத்தொகை நிதியம் அழைப்பு

United Nations Sri Lanka Northern Province of Sri Lanka
By Sathangani Mar 01, 2024 10:05 AM GMT
Report

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (01) இந்த சந்திப்பு நடைபெற்றது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள் மீது கவனம் செலுத்தி பாலியல் மற்றும் குடும்பத்திட்ட ஆரோக்கியம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடும் நோக்கில் பணிப்பாளர் பியோ ஸ்மித் இலங்கைக்கு விஜயம் மேற்கொன்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

ஆளுநருடனான சந்திப்பு 

அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து, மாகாணத்தில் வசிக்கும் பெண்களின் நிலை குறித்து கலந்துரையாடினார்.

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு ஆளுநருக்கு ஐ.நா சனத்தொகை நிதியம் அழைப்பு | Regional Director Unfpa Meet Northern Governor

அதன்படி காவல் நிலையங்களில் பாலின சமத்துவத்தின் அடிப்படையிலான விசாரணைப் பிரிவை மேம்படுத்துவதற்கான தேவை குறித்தும், தமிழ் பெண் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான ஆளணி தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

பெண்களுக்கான தொழில் சட்டங்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்த ஆளுநர், நிறுவனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை எனவும் கூறினார்.

தாயின் கவனயீனம்! ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தது ஒரு மாத குழந்தை

தாயின் கவனயீனம்! ஓடும் முச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தது ஒரு மாத குழந்தை

ஆளுநருக்கு அழைப்பு

தொழில் இடங்களில் கழிப்பறை வசதி, உணவு வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் பெண்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு ஆளுநருக்கு ஐ.நா சனத்தொகை நிதியம் அழைப்பு | Regional Director Unfpa Meet Northern Governor

வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்கள் வாழ்வியலை நடாத்தி செல்வது பெரும் போராட்டமாக அமைந்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வசிக்கும் பெண்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பியோ ஸ்மித், இங்குள்ள பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்று, அவர்களுக்கான முன்மாதிரியாக செயற்பட ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.

100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு:ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு:ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்