உடன் நிறுத்துங்கள் - கோட்டாபய அரசுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Death Covid-19 Gotabhaya Rajapaksa United Nations
By Vasanth Jan 28, 2021 04:25 PM GMT
Report

  கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை, கட்டாயம் தகனம் செய்யும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுளின் நான்கு விசேட நிபுணர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது, மனித உரிமை மீறலுக்கு நிகரான விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பதன் ஊடாக, கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக, மருத்துவ மற்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியே, இலங்கை அரசாங்கம் சடலங்களை தகனம் செய்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது எனினும், சடலங்களை புதைப்பதன் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரை துன்புறுத்தும் நோக்கில், பாகுபாடு, அடக்குமுறை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களின் சடலங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்காது, தகனம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலங்கள் தகனம் செய்யப்பப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை மக்கள் மீது பிரயோகிக்கப்படும் வெறுப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்