ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த எண்ணிக்கை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 0.85 சதவீதமாகப் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
எனினும் கடந்த 21ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த முறை அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை, குறித்த ஆய்வின் பின்னர் கண்டறிய முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |