காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்
Missing Persons
Vavuniya
By Sumithiran
வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் இன்று(27) காலை கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான இன்று குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான ஊர்வலம்
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணிக் கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை வந்தடைந்தனர்.
அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 59 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி