வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு

Sri Lanka Army Tamils Eastern Province Northern Province of Sri Lanka Harini Amarasuriya
By Kajinthan Aug 22, 2026 02:20 PM GMT
Report

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரியவிடம் காணி விடுவிப்பு தொடர்பான மஜகரை இன்று சனிக்கிழமை கையளித்தனர்.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ, யாழ் மாவட்ட செயலகத்தில் இலங்கையின் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் சந்தித்து பேசினோம்.

வீதி வீதியாக போராடுகிறார்கள்

வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக அவற்றை மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு | Release Lands Held By Soldiers Magair Hands Harini

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு , மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள்.

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

முழுமையானதும் நீதியானதுமான தீர்வு

புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு | Release Lands Held By Soldiers Magair Hands Harini

அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024