மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்தது நீதிமன்றம்

Supreme Court of Sri Lanka Crime
By Jaso Mar 14, 2024 07:15 PM GMT
Report

மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராஜா என அழைக்கப்படும் வேலுப்பிள்ளையான் தியாகராஜா என்ற பிரதிவாதியை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தனிப்பட்ட தகராறில் கொலை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தரவின் இணக்கப்பாட்டுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோதே நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்தது நீதிமன்றம் | Release Of Death Row Tamils

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஆறுமுகம் சந்திரசேகரனின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

மனித உயிருக்கு ஆபத்து :23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா

மனித உயிருக்கு ஆபத்து :23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா

நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஓகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை வழங்கிய கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி  குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜாவுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மற்றுமொரு குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த மயில்வாகனம் மனோரஞ்சனை விடுதலை செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனையில் இருந்து விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, குற்றம் சுமத்தப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்தது நீதிமன்றம் | Release Of Death Row Tamils

மேன்முறையீட்டு மனுவை நீண்ட காலமாக ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச்,  உயர் நீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை என்று கூறியது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், அவரை குற்றவாளி என உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு சரியானது அல்ல என்று கூறியது.

தமிழர்களின் பூர்விக அடையாளம் ஒழிக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

தமிழர்களின் பூர்விக அடையாளம் ஒழிக்கப்படுகின்றது: செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பிரதிவாதியை அந்த தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026