நிருபமா ராஜபக்ச தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளிவந்தது
பண்டோரா ஆவணங்களால் உலகம் முழுவதும் பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கதிகலங்கிப்போய் உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையிலும் இந்த அதிர்வு கொழும்பு அரசியலை ஆட்டிப்படைத்துள்ளது.
இதன்படி முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக் (Nirupama Rajapaksa)ஷ மற்றும் அவரது கணவர் நடேசனுக்கு(nadesan) சொந்தமான சொகுசு வீடொன்று பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பன்டோரா ஆவணத்தில் இவரது இரகசிய ஆவணங்கள் பற்றிய தகவல் வெளிவந்த நிலையில், அதிலிருக்கின்ற அவுஸ்திரேலிய வீடு பற்றியே சர்வதேச செய்திச் சேவைகளில் ஒன்றான ABC பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.
குறித்த வீடு பற்றி நிருபமா ராஜபக்ஷ தரப்பினரிடம் பலதடவை கேட்டபோதிலும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் அந்த செய்திச்சேவை மேலும் கூறியுள்ளது.
பண்டோரா ஆவணத்தின் ஊடாக 2016ஆம் ஆண்டில் நிதி முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதனை அவர்க்ள நிராகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிதிமுறைகேடுகள் பற்றிய வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் விசாரணைக்கும் வரவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.