மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணங்கள்: ரணில் விடுத்த கோரிக்கை
அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களின் பலன்களை மக்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க மாகாண ஆளுநர்கள் தலையிட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
பரம்பரை இலவச காணி பரிமாற்றத் திட்டத்தின் வினைத்திறன், மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதன்போது, மாகாண மட்ட ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை மாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |