யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம்

Mannar Sri Lanka Myanmar
By Shalini Balachandran Mar 29, 2024 07:13 AM GMT
Report

யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) மாலை நேரடியாக சென்று வழங்கி வைத்துள்ளனர்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேரடியாக விஜயம் செய்து வழங்கி வைத்துள்ளனர்.

யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பங்களாதேஷில் வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள கடலில் பயணித்த போது கடல் மார்க்கமாக பயணித்த மியன்மார் முஸ்லிம் அகதிகள் 105 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

அகதிகள்

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியை வந்தடைந்த மியன்மார் அகதிகள் 105 பேரையும் மீட்ட கடற்படையினர் யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த மியன்மார் அகதிகள் கொழும்பு பாணந்துறையில் தங்க வைக்கப்பட்டனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

அவர்களுக்கு சர்வதேச அமைப்பினால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 டிசம்பர் வரையான ஒரு வருட காலம் அடிப்படை உதவிகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இவ்வருடம் 2024 முதல் அவர்கள் பாணந்துறை பகுதியில் வாடகைக்கு அமர்ந்திருந்த வீடுகளுக்கான மாத வாடகையை செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

மனிதாபிமான பணி

குறித்த மக்கள் இருந்த வீடுகளின் ஒப்பந்தம் முடிவடைந்தமையினால் வீடுகளின் இருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் இதனால் எவ்வித அடிப்படை உதவிகளும் இன்றி மியன்மார் அகதிகள் 105 பேரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவர்களுக்கான உடனடி மனிதாபிமான பணிகளை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) உடனடியாக சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியில் அவசர உதவிகளை வழங்கி இருந்தனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

அதன் தொடர்ச்சியாக அந்த மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பாணந்துறை பகுதியில் அவர்கள் தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டில் தங்கி இருக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம்(28) வியாழக்கிழமை பாணந்துரை பகுதிக்குச் சென்ற மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் குறித்த வீடுகளுக்கான வாடகை பணத்தை கையளித்துள்ளனர்.

"எல்லைகளை திறவுங்கள்" இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்த உத்தரவு

"எல்லைகளை திறவுங்கள்" இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நிவாரண பணி

வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகளையும் சந்தித்து அவர்களுக்கான வீட்டு நிவாரண பணியாக எதிர்வரும் ஒரு வருடத்திற்கான வீட்டு வாடகைக்கான நிதியை செலுத்தியுள்ளனர்.

17 குடும்பங்களில் தயார் நிலையில் இருந்த 15 குடும்பங்களுக்கு 33 லட்சத்து 15500 ரூபாய் நிதியும் இரண்டு குடும்பங்கள் தமது ஆவணங்களை சரி செய்யாத நிலையில் அவர்கள் குறித்த ஆவணங்களை உடன் சமர்ப்பிக்கும் போது அவர்களுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் மொத்தமாக 3,771,500 ரூபா நிதி மெசிடோ நிறுவனத்தினால் அவர்களின் வீட்டு வாடகைக்காக பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு மன்னார் மெசிடோ நிறுவனத்தின் மனிதநேய பணி உதவியாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் போதிய உதவிகள் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில் எந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்! பசில் திட்டவட்டம்

முதலில் எந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்! பசில் திட்டவட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026