யாழ் பல்கலையில் மதரீதியிலான பிளவு?? சிக்கிய ஆதாரங்கள்!!
இலங்கையில் கல்வியை வளர்ப்பதில் கிறிஸ்தவ மிஷனறிகள் வகித்த பங்கு அளப்பரியது.
குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் உருவாக்கிய கல்விக்கூடங்கள், கல்விரீதியிலான அவர்களது வழிநடாத்தல்கள், அர்ப்பணிப்புக்கள், அந்த மக்களின் வாழ்வில் மிகப் பெரிய பெறுபேறுகளை உருவாக்கிவிட்டிருந்தன என்றால் மிகையில்லை.
ஆனால் அண்மைக்காலமாக வடக்குகிழக்கு கல்விசார் நடவடிக்கைகளில் ஒருசில கிறிஸ்தவ பாதிரியார்களின் பெயர்கள் அடிபட்டுவருவது கவலையளிப்பதாகவே இருக்கின்றது.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான பீடாதிபதித் தேர்வின்போது ஏற்பட்டிருந்த சர்ச்சையில் நாகரிகத்துறையின் தலைவரான ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் பெயர் அடிபட்டது.
மதத்தை அடிப்படையாகவைத்து யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டதாகக்கூறப்படுகின்ற அந்தச் சர்ச்சையினால் கலைப்பீடம் இரண்டுபட்டு நின்ற காட்சி, தமிழ் மக்களை முகம்சுழிக்கவைத்திருந்தது.
அதேபோன்றுதான் கிழக்கின் மிக முக்கிய பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரி அதிபர் தெரிவின்போதும், ஒரு கத்தோலிக்கத் துறவி அதிபராக வந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட கத்தோலிக்க ஆயர்பீடம் தரை மட்டத்துக்கு இறங்கி அரசியல் செய்ததாக வெளியான பல்வேறு கதைகள் அந்தப் பிரதேசவாழ் தமிழ் மக்களை கேபமடைய வைத்திருந்தன.
தமிழ் பேசும் சமூகம் என்ற இன அடையாளத்தில் இருந்து முஸ்லிம்களைப் பிரித்ததுபோன்று கிறிஸ்தவ சமூகத்தையும் பிரிப்பதற்காக நடைபெறுகின்ற சதிகளுக்குள் இந்த இரண்டு தரப்பினரும் சிக்குப்பட்டுவிடக்கூடாது என்பதில் மதத்தலைவர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகமூமே கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் இந்த முரன்பாடுகள் நீண்ட காலமாக இருந்துவருவதாக விரிவுரையாளர்கள் பலர் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
சமயக் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் நிலை நான்காவது தடவையாக யாழ் பல்கலைக்கழத்தில் கலைப்பீடாதிபதிக்கான தெரிவின்போது ஏற்படுத்தப்பட்டமையையும் இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்கவிரும்புகிறோம்.
கலைப்பீடாதிபதிக்கான தேர்தலின் போது ஒருசில விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சமயக்காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களும், அந்த தேர்தல் காலகட்டத்தில் வெளியிடப்பட்ட அநாமதேயப் பிரசுரங்கள் பற்றிய தகவல்களும், அந்தக் காலகட்டத்தில் விரிவுரையாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துவேட்டைகள் பற்றிய செய்திகளும் எங்களிடம் ஆதாரங்களுடன் இருக்கின்றன.
அந்தக் காரியங்களில் யார் யார் ஈடுபட்டார்கள், துண்டுப் பிரசுரங்களை யார் யாரரெல்லாம் எழுதினார்கள், எப்படியானவசனங்கள் எழுதப்பட்டன, எந்தெந்த வசனங்கள் பின்னர் நீக்கப்பட்டன, யார் யார் வினியோகித்தார்கள் போன்ற அத்தனை தகவல்களும் எங்களுக்கு ஒளிப்பட ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன.
இருந்தபோதிலும், யாழ் பல்கலைக்கழகத்தின் மான்பை மனதிற்கொண்டும், தமிழ் இனத்தில் மதத்தின் பெயரால் ஒரு பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினாலும் 'சொன்னாலும் குற்றம்' அவை எதனையும் இம்முறை வெளியிடவில்லை.
மற்றொரு தடவை இதேபோன்று மௌணம்காக்கமாட்டோம் என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இன்னொரு பிளவைத் தாங்கிக்கொள்ளும் நிலையில் தமிழ் இனம் இல்லை என்பதை மனதில் நிறுத்தி, சுயஇலாபங்களுக்காக தாம் சார்ந்த மதத்தைப் பயன்படுத்தி மதரீதியிலான பிளவுகளை தமிழ் மக்கள் மத்தியில் தூண்டக்கூடாது என்று தமிழ் மக்களின் சார்பில் 'சொன்னாலும் குற்றம்' சம்பந்தப்பட்டவர்களிடம் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

