தமிழர் தாயக மக்களை மீண்டுமொரு மத யுத்தத்திற்கு வலிந்து ஈர்க்கும் சிங்கள தேசம்!

Sri Lanka India Hinduism Sonnalum Kuttram Buddhism
By Kalaimathy May 04, 2023 07:53 AM GMT
Report

யுத்த வலிகளோடு அன்றாட வாழ்வியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

படையினரின் தேவைக்கு தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களே தற்போது புதிது புதிதாக பௌத்த சின்னங்களையும், விகாரைகளையும், தூபிகளையும் அமைத்து ஆக்கிரமிப்பிற்கு புதிய வடிவம் கொடுப்பதோடு இன்று பௌத்த இந்து நேரடி யுத்தத்திற்கும் வலிந்து அழைக்கின்றனர் என்பதை வலிகாமம் வடக்கு தையிட்டி நிகழ்வு எடுத்து காட்டுகின்றது.

புதிதாக பௌத்த சின்னங்கள்

தமிழர் தாயக மக்களை மீண்டுமொரு மத யுத்தத்திற்கு வலிந்து ஈர்க்கும் சிங்கள தேசம்! | Religious War North East Protest Buddhist Temple

அரசியல் உள்நோக்கம் கொண்ட இச்செயற்பாட்டினை சமயம் கடந்து அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதலை தூண்டி அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும், அவர்களை இன்றும் பாதுகாக்கும் சக்திகளுமே அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு தற்போது பௌத்த இந்து மோதலை வடக்கிலே ஆரம்பிக்க முனைப்பு காட்டுகின்றன.

இதனை சமய நல்லிணக்கம் விரும்பும் அனைவரும் கண்டிப்பதோடு தமது பலத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும். அடாத்தாக பௌத்த சின்னங்களை வைப்பதையும், விகாரைகள், தூபிகள் அமைப்பதையும் ஒரு சில கிறிஸ்தவ சமய அடிப்படைவாத சக்திகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் சமய நல்லிணக்கம் விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தாயகத்தை பாதுகாக்கும் செயற்பாடு

தமிழர் தாயக மக்களை மீண்டுமொரு மத யுத்தத்திற்கு வலிந்து ஈர்க்கும் சிங்கள தேசம்! | Religious War North East Protest Buddhist Temple

இத்தகைய அநாகரீக செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. இந்நிலையில் கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் அறிக்கைகளுக்கு மட்டும் தம்மை கட்டுப்படுத்தி விடாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தோடு கைகோர்த்து எழுந்து நிற்பதே தேசியத்தை பாதுகாக்கும் காலத்தின் அரசியல் செயற்பாடாகும்.

நில ஆக்கிரமிப்பிற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் கடையடைப்பு செய்த அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களின் தேசிய நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய காலம் இது.

தையிட்டி மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாக்கும் செயல் என்பதோடு தாயகத்தை காப்பதற்கான எதிர்கால செயற்பாட்டுக்கும் துணை செய்யும்.

அமைதி காக்கும் இந்தியா

தமிழர் தாயக மக்களை மீண்டுமொரு மத யுத்தத்திற்கு வலிந்து ஈர்க்கும் சிங்கள தேசம்! | Religious War North East Protest Buddhist Temple

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் இருந்து இலங்கை தம்மை விடுவித்து கொள்ள நினைக்கும் பின்னணியில், அதனை உணர்ந்து செயல்படும் இந்தியா, அன்று உணவு பொட்டலங்களை பலவந்தமாக கொண்டு வந்து போட்டது போன்று எந்த காரியத்தையும் இனி அவசரமாக செய்யப் போவதில்லை.

இந்தியாவின் அமைதி காத்தலை பாவித்து பௌத்த மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்கின்றது. அரசியல் நுண் அறிவோடும் மக்கள் சக்தியோடும் முன்னெடுக்கும் நகர்வுகளே ஆக்கிரமிப்பை தடுக்கும். இலக்கு நோக்கிய அரசியல் பயணத்திற்குப் வழிவகுக்கும்.


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024