பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று (26) காலை 10.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் பங்கு
இக்கலந்துரையாடலின்போது பிரதானமாக, நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையினுடைய கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவினுடைய பங்கு என்பன தற்கால அரசியல் விடயங்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளன.
மனித உரிமை பேரவையின் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இச்சந்திப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம் மற்றும் மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டிலும் ரெலோ சார்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 13 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்