தங்க நாக்குடன் 2500 வருடத்துக்கு முந்தைய மம்மி கண்டுபிடிப்பு!

USA France Italy Egypt Spain Excavation Mommy Tongue in Gold
By Chanakyan Dec 07, 2021 10:34 AM GMT
Chanakyan

Chanakyan

in உலகம்
Report

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

14 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சிக் குழுவில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர்.

வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசில் உள்ள ‘சாண்டோ டொமிங்கோ பல்கலைக்கழக’ ஆராய்ச்சிக் குழுவின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியில் தங்கத்தால் ஆன நாக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 கல்லறைகளின் உள்ளே புதைக்கப்பட்ட சடலங்களின் நாக்குகளை தங்க தகடுகளால் மாற்றி, பழங்கால எகிப்தியர்கள் நல்லடக்கம் செய்து உள்ளனர்.

இதன்மூலம், எகிப்தியர்களின் பாதாள உலக கடவுளாக கருதப்படும் ஓப்சிரிஸ் உடன் இறந்தவர்களின் ஆவி பேசுவதற்காக பழங்கால எகிப்தியர்கள் இந்த நடைமுறையை கையாண்டுள்ளனர்.

இவை இரண்டு கல்லறைகளும் கி.மு. 525க்கு முந்தைய சைட் வம்சத்தை சார்ந்தவை ஆகும். இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மம்மியின் வாயிலிருந்து வெளியே தள்ளிய நிலையில் அந்த தங்கத்திலான நாக்கு அமைந்துள்ளது.

ஒரு கல்லறையினுள், இறந்த அந்த ஆணின் உடல் மிக நன்றாக பாதுகாக்கப் பட்டு கல்லறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆணின் கல்லறைப்பெட்டியில் இருந்து 402 மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அத்துடன் சிறிய தாயத்துக்களின் தொகுப்பு மற்றும் பச்சை மணிகள் போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன.

அதனுள் நகைகள், கல்லறை பொருட்களும் அதிக அளவில் கிடைக்கப்பட்டுள்ளது. இரண்டு உடல்களும் தனித்தனியாக இரு வேறு கல்லறைகளில் சுண்ணாம்பு கற்களால் ஆன அடித்தளத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தன.

ஆணின் கல்லறையில் பழங்கால எகிப்தியர்கள் புனிதமாகக் கருதிய வண்டு, ஜாடிகள் மற்றும் மண்பாண்டங்கள் உள்பட சில கலைப்பொருட்கள் இருந்தன. பெண்ணின் கல்லறையை திருடர்கள் சேதப்படுத்தியதால் அதனுள் பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பாறையிலிருந்து வெட்டப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளின் உள்ளே இருக்கும் மம்மிகளில், இன்றளவும் மின்னிக் கொண்டிருக்கும் தங்க நாக்குகள் எலும்புக்கூடுகளின் வாயின் வெளியே கண்ணுக்கு தெரியும்படி உள்ளன.

மேலும், அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பழங்கால எகிப்திய தலமான டபோசிரிஸ் மாக்னா பகுதியில் இருந்து 16 மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் ஒன்றின் மண்டையோட்டில் இதே போன்ற தங்கத்திலான நாக்கு இருந்தது.

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம், கூடுதலாக 3 தங்க நாக்குகள் கல்லறையின் வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை கி.மு. 30ஆம் காலகட்டத்தை சார்ந்தவை. எகிப்தில் ரோமானியர்காளின் ஆட்சிக்காலத்தின் போது உள்ளவை.

இது போன்ற தங்க நாக்குகள் அதிக அளவில் எகிப்திய மம்மிகளில் காணப்படும். கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்ட மம்மியில் இதே போன்ற தங்கத்தாலான நாக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.


தங்க நாக்குடன் 2500 வருடத்துக்கு முந்தைய மம்மி கண்டுபிடிப்பு! | Remains Man And Woman Buried Golden


GalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024