சாமர சம்பத் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்படி இம்மாதம் 08ஆம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இவ்வாறான பின்னனியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதுளை நீதவான் நுஜித் டி சில்வாவினால் இன்று (21.04.2025) இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
