வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
By Vanan
வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த நான்கு இந்திய கடற்றொழிலாளர்களையும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று(28) நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் இயந்திர கோளாறு காரணமாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.
விளக்கமறியல் உத்தரவு
தஞ்சமடைந்துள்ள இந்திய கடற்றொழிலாளர்களை வல்வெட்டித்துறை காவல்துறையினர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதன்போதே நீதவான் நீதிமன்றம் நான்கு இந்திய கடற்றொழிலாளர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்