சிறைப்பேருந்தில் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட நாமல்
புதிய இணைப்பு
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
பிரேரணை
செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது
இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வீட்டில் இருந்து உணவு
இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening