கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
Ministry of Education
Sri Lankan Peoples
Graduates
By Dilakshan
நில அளவையாளர் பட்டதாரிகள் பட்டய நில அளவையாளர்களாக மாறுவதைத் தடுக்கும் தடைகளை நீக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 பட்டதாரிகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தேவையான வசதி
தற்போது, பட்டதாரிகள் தங்கள் நில அளவையாளர் உரிமத்தைப் பெறுவதற்கு நில அளவைத் திணைக்களத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தக் காலத்தைக் குறைத்து உரிமம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்