முதியவரின் வயிற்றில் கிடந்த பெருமளவு நாணயங்கள் -மருத்துவர்களுக்கு அதிர்ச்சி
முதியவரின் வயிற்றுக்குள் 187 நாணயங்கள் இருந்த நிலையில் எவ்வாறு அந்த நாணயங்கள் அவரின் வயிற்றுக்குள் சென்றன என்பது தொடர்பில் ஆச்சரியத்தில் உறைந்து போயினர் மருத்துவர்கள்.
கார்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். 60 வயதாகும் ஹரிஜன் மது பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. அதே வேளையில், சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வயிற்றில் ஏராளமான நாணயங்கள்
அண்மையில் கடுமையான வயிற்று வலி காரணமாக துடித்த திம்மப்பா ஹரிஜனை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது, எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. திம்மப்பா வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருக்கும் நாணயங்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சமீபத்தில் ஹரிஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் இருந்து சுமார் 1.2 கிலோ எடைக்கு இருந்த சுமார் 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
உரிய நேரத்தில் சத்திரசிகிச்சை
மேலும், ஹரிஜனின் வயிற்றில் 56 ஐந்து ரூபாய் நாணயங்களும், 51 இரண்டு ரூபாய் நாணயங்களும், 80 ஒரு ரூபாய் நாணயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல, உரிய நேரத்தில் அவற்றை அகற்றியதால் திம்மப்பா ஹரிஜன் உயிர் பிழைத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், நாணயங்களை திம்மப்பா ஹரிஜன் விழுங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
