பீரிஸ் தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு
தூக்கி வீசப்பட்டார் பீரிஸ்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். அதுவரை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்சவே கருதப்படுவார் என அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே ஜி.எல். பீரிஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கட்சியின் எந்தப் பணிகளிலும் ஈடுபடமாட்டார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர முடிவு
இதேவேளை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஜி.எல். பீரிஸ் உட்பட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பதி, திலக் ராஜபக்ச, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அறிவித்தவர்களாவர்.

