மொட்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு -வெளியான அறிவிப்பு
வேலை செய்யத் தெரியாதவர்கள்
தமது கட்சியில் வேலை செய்யத் தெரியாதவர்களே எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பொதுஜன பொதுஜன பெரமுனவின் 13 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் இன்றையதினம் அமர்ந்தனர். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும சட்டத்தரணி டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமண, கே.பி.எஸ்.குமாரசிறி, கலாநிதி குணபால ரத்னசேகர, வசந்த யாப்பா பண்டார, திலக்ச ராஜபக்ஷ, உபுல் எல்லாவலா, உபுல் எல்லாவலாட்டி ஆகியோரே எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திறமையற்ற செயலாகும்
தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது படிப்படியாக விலகுவதால் பல ஆண்டுகளாக தாங்கள் செயல்பட முடியாத குழு என்பதை நிரூபித்துள்ளனர்.
ஆனால் இதற்கு பரிகாரமாக எதிர்க்கட்சியில் அமரும் செயல் திறமையற்ற செயலாகும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.


