உடனடியாக நீக்குங்கள் - இலங்கையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
srilanka
eu
import restrictions
By Sumithiran
இலங்கை தற்போது விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை உடன் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி பிரச்சினை காரணமாகவே இறக்குமதித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
நாடு எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி பிரச்சனை குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வருவதாகவும், அந்த பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைத்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் இலங்கை பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
