கோடைகால ஒன்றுகூடலின் விருந்தில் இருந்து நீக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி..!
புலம்பெயர்ந்த பருத்தித்துறை மக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கும் கோடைகால ஒன்றுகூடலில் தமது ஒன்று கூடல் நிகழ்வின் விருந்தில் இருந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை நீக்கம் செய்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நிகழ்வில் ஆடம்பர உணவுகளோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற விடயத்தையும் இணைத்திருப்பது பெரு வேதனைக்குரிய விடயமென தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டு வந்த நிலையிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிகழ்வின் ஏற்பாட்டு குழு வெளியிட்ட அறிவித்தலில்...

"அன்பான பருத்தித்துறை மக்களுக்கு,
முள்ளிவாய்க்கால் கொடூர இனழிப்பை எம் இளம் சந்ததியினருக்கு விளங்க வைக்கும் நோக்கிலேயே இதனை (கஞ்சி வழங்கும் நிகழ்வு) செய்வதாக முதலில் தீர்மானித்திருந்தோம்.
பின்னர் அது இந்த ஒன்றுகூடலில் ஒரு சிறு நிகழ்வாக மாறி அதன் புனிதத் தன்மையை இழக்கக்கூடாது என்பதற்காக அதனை நீக்கம் செய்துவிட்டோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.