கனடாவில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! வெளியான அதிர்ச்சி தகவல்
Government of Canada
Canada
World
By Laksi
கனடாவில் (Canada) வீட்டு வாடகைத் தொகை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கனேடிய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது.
வாடகைத் தொகை அதிகரிப்பு
அத்துடன், கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.
அதேவேளை, இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 2295 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த தொகையானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 11 வீதமாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி