விமானங்களை குறி வைத்து வெடிகுண்டு மிரட்டல்: அரசாங்கத்தின் முக்கிய நகர்வு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை நேற்று, இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடி உள்ளது.
தொடரும் அச்சுறுத்தல்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை பாதிக்கக்கூடும் என்றும், இது சுற்றுலாத் துறையின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு சோதனை
இந்த நிலையில் விமானம் இலங்கை வான் எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும் அருகிலேயே கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பு சோதனைக்காக திருப்பி விடப்படுகின்றன.
அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரே நேரத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு விமானங்களுக்கு இலங்கை சட்ட நடைமுறையாக்க அதிகாரிகள் முகங்கொடுக்க நேரிட்டதுடன், அதிகாரிகள் கிடைத்த மனிதவளத்தைக் கொண்டு நிலைமையை திறம்பட நிர்வகிக்க முடிந்தது.
முழுமையான விசாரணை
அதன் படி, குறித்த வளர்ச்சியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்களை மிகவும் திறமையாக எதிர்கொள்ளவும் கூடுதல் சட்ட நடைமுறையாக்க பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |