தமிழர் பிரதேசங்களை ஆட்டிப்படைக்கும் அரச அதிகாரிகள்: வேடிக்கை பார்க்கும் அரசு

Sri Lankan Tamils Tamils Jaffna Mannar
By Shalini Balachandran May 29, 2025 05:00 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இல்லாத மக்களிடத்து சட்டத்தின் பாய்ச்சலும், அதிகாரமுடைய கைகளின் ஓங்கல்களும் சற்று மேட்டுமத்தனத்துடன்தான் இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

காரணம், படித்தவர்களும், இருப்பவர்களும் கொலையே செய்தாலும் வால் பிடிக்கும் ஒரு சமுதாயக்கட்டமைப்பு தற்காலத்தில் மேலோங்கியுள்ளது.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டுதான் அண்மையில் பூநகரி முழங்காவில் பகுதியில் சட்டவிரோதமாக கடை ஒன்று அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு வியாபாரியின் கடை அகற்றப்பட்ட விதம்.

யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் சட்டவிரோதமாக கடை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பிரதேச சபை செயலாளர் மற்றும் வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த கடையை உடைத்து அங்கிருந்து அகற்றி இருந்தனர்.

இந்த விடயம் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகள் என பரவி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

காரணம், சாதாரண மக்களுக்கு சட்டம் தெரியவில்லை என்றால் அது கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் படித்த சில அரச அதிகாரிகள் இவ்வாறு சட்டத்தை அடக்குமுறைக்காக கையில் எடுப்பது என்பது மக்களுக்கு சட்டம் மீதான கேள்வியை ஏற்படுத்துகின்றது.

அரச நிலத்தில் சட்டவிரோதமாக ஒரு கட்டிடமோ அல்லது பெட்டி கடையோ அமைக்கப்பட்டால் முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டிடத்தையோ அல்லது கடையையோ அகற்றும் அறிவிப்பை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.

அறிவிப்பை பின்பற்றாதவர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம், கட்டிடத்தை அல்லது கடையை அகற்றும் உத்தரவை வழங்கினால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இங்கு சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு எவ்வித முன்னறிவிப்போ அல்லது எழுத்து மூல ஆவணமோ வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எவ்வித சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல், எவ்வித முன்னறிவிப்பும் வழங்காமல் திடீரென நிலத்தை விட்டு அகற்றுமாறு தெவித்து அதிகாரத்தை தனக்கு ஏற்றாற் போல அரச அதிகாரிகள் பயன்படுத்துவது என்பது அடாவடித்தனத்தின் உச்சக்கட்டமாகவே உள்ளது.

இதுவே ஒரு படித்த அரச அதிகாரியோ அல்லது அரசியல் தலைமையோ குறித்த இடத்தில் ஒரு கட்டிடத்தை கட்டி இருந்தால் அதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கை என்பது அங்கு வேறுமாதிரி இருந்து இருக்கும்.

ஆனால் ஒரு பெட்டி கடையை அமைத்த சாதாரண மனிதன் என்பதால் அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை சற்று அதிகார வர்க்கத்தில் இருந்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த காரணத்தினால் செய்வதறியாது கடையை அமைத்த நிலையில் உரிய சட்ட ரீதியான  நடவடிக்கை இன்றி அங்கு அவர் மீது  மேற்கொள்ளபட்ட அடக்குமுறை அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

யுத்த காலத்தில் தென்னிலங்கை தரப்பில் பாதிக்கப்பட்டதாக இராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்தி தரும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத்தையும் தேடி தர வேண்டியது அரசின் கடமை.

ஆனால், தற்போது வரை யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உரிய வேலை இல்லாமல், மூன்று வேலை சரியான உணவில்லாமல், கை மற்றும் கால் என இழந்து குடும்பத்திற்காக சரியான வறுமானம் இன்றி திண்டாடும் மக்களுக்கு எவ்வித வாழ்வாதார நடவடிக்கைகளும் அரச தரப்பில் எடுக்கப்படவில்லை.

இதனை தாண்டி அண்மைக்காலங்களிலும்,

  1. முல்லைத்தீவில் (Mullaitivu) முதியோர் கொடுப்பனவு பெற சென்ற முதியவர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விடப்பட்டமை.
  2. யாழில் மனிதாபிமானற்ற முறையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டமை.
  3. யாழ் (Jaffna) - வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை (Point Pedro) மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் மூர்க்கத்தனமாக சீவல் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டமை.

என அரச அதிகாரிகளின் அடாவடித்தனம் தமிழர் தரப்பில் சாதாரண மக்களிடத்தில் தேவைக்கு ஏற்றாற் போல அதிகமாக விளையாடுகின்றது.

இருப்பினும், தற்போது பூநகரி பகுதியில் இது சற்று அதிகம் தலைததூக்கியுள்ளதுடன் இதனால் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுப்பதுடன் அதே நேரத்தில் அரச அதிகாரிகள் பாரிய நலன்களையும் பெற்று வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களது சுயலாபத்திற்காக அன்றைய நாளுக்கான தேவையை நோக்கி தேடி ஓடும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை சில அரச அதிகாரிகள் பிடுங்கி எடுப்பது வெட்கி தலைகுனிய வைக்கின்றது.

இந்தநிலையில், இது குறித்த விரிவான பின்னணி, சர்ச்சையை ஏற்படுத்திய பூநகரி கடை விவகாரம், அங்குள்ள மக்களின் நிலை மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராய நேரடியாக புறப்பட்டது ஐபிசி தமிழ்,            

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023