இலங்கையில் நிலவும் கடும் வெப்பம்! மீண்டும் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடும் வெப்பம் காரணமாக சுற்று சூழலில் ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பினால் சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.
சுவாசக்கோளாறு
இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மற்றும் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.
ஆகவே சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |