கனடாவில் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர்காக்கும் உருக்கமான கோரிக்கை!
இனஅழிப்புப் போரின் கொடூர விளைவுகளால் கனடாவில் அவதியுறும் ஈழத்தமிழரான சுரேன் கார்த்திகேசு என்பவர், மக்களிடம் மனிதாபிமான அடிப்படையில் உதவி கோரி உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களில் அடுத்தடுத்து படுகாயமடைந்த அவர், கடந்த 16 ஆண்டுகளாக அதன் உடல்-மன பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பல சிரமங்களுக்கிடையிலும் அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது.
இரண்டு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்துள்ளதால், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவசியமாகியுள்ளது.
இந்த நிலையில், சட்டரீதியான காரணங்களால் நாட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழலில், கனடாவில் வசிக்கும் B அல்லது O வகை குருதியைக் கொண்ட எவரேனும் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினால், தனது உயிரை காப்பாற்ற முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதன்படி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ விரும்புபவர்கள் கீழ்கண்ட விவரங்கள் மூலம் அவரை தொடர்புகொள்ளலாம்.
சுரேன் கார்த்திகேசு மின்னஞ்சல்: surenvanni2010@gmail.com தொலைபேசி: +1 778 708 8893

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |