செம்மணி விவகாரத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த கோரிக்கை
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழிகள் சர்வதேச அளவில் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கையில் இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டை ஈழத்தமிழர்தரப்பும் சில மனித உரிமைகள் அமைப்புகளும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதனை ஆதாரப்படுத்தும் ஒரு மிகப்பெரும் சாட்சியமாக மண்ணுக்குள் இருந்து மனிதக்கூடுகள் வெளிப்பட்டுக்கொட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மீளவும் ஒரு சர்வதேச அழுத்த்திற்கு இலங்கை அரசு தள்ளப்படபோகிறது அனுமானங்களை உண்மையாக்கும் வகையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை அதுபோல பிரித்தானியாவில் இருந்தும் ஒரு செய்தி வெளிப்பட்டுள்ளது.
அதாவது கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா கோரியுள்ளார்.
எனவேதான் இப்படியாக சர்வதேசத்தின் பார்வை செம்மணி மீது பதிந்துள்ள நிலையில் ஒரு மாற்று பரிமாணத்தை அடையப் போகிறது என்பது தொடர்பிலான சில விரிவான விபரங்களை ஆராய்கிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
