இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை! அருட்தந்தை காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள கோரிக்கை
People
Easter
SriLanka
Bombing
By Chanakyan
ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வத்திக்கான் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அருட்தந்தை காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புலா லிவேராவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு நியாயமும் கிடைக்கப் பெறவில்லை எனவும், இதனாலேயே சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மையான விடயங்கள் அம்பலமாவதாக இன்னமும் தென்படவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி