திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (03) ஊர்காவற்துறை பகுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் பத்தாம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு கடற்தொழிலாளர்களும் , கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்றினால் விடுதலை
அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்த நிலையில் கடந்த மூப்பதாம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்குடன் திருச்சி சிறப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அனலைதீவை சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவருமே நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இருவரையும் அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |