யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இந்தியாவிலிருந்து (India) நாட்டிற்கு வருகை தந்துள்ள கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குழு தமது பேச்சவார்த்தைகளை யாழ்.மாவட்டத்திலேயே நடாத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாச அலுவலகத்தில் இன்று (27.03.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றையதினம் (26.03.2025) இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்குமிடையே ஒரு சந்திப்பு வவுனியாவில் நடைபெற்றது.
இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, தற்போது வருகை தந்துள்ள இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடைய பேச்சு வார்த்தை நீதியற்றதும் , நியாயமற்றதுமாக காணப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
