காரைதீவு கடற்கரையோரங்களில் தேங்கி கிடக்கும் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகள்...உடன் அகற்றுமாறு கோரிக்கை!
அம்பாறை (Ampara) மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடைமழை காரணமாக,வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெட்டப்பட்டது, இந்நிலையில் இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரை ஒதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளான காரைதீவு, மாளிகைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறாக கழிவுகள் அதிகளவில் தேங்கி நிற்பது அடையாளங்காணப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை
இவ்வாறாக கழிவுகள் அகற்றப்படாது கரையோரப்பகுதிகளில் தேங்கி நிற்பது கரையோர கடற்தொழிலாளர்களின் கடற்தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்குவதால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |