புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான அவசர அறிவித்தல்
Sri Lanka
Sri Lanka visa
Department of Immigration & Emigration
By Raghav
7 months ago
கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பற்றாக்குறை
இதேவேளை இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் அவை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையை சமாளிக்க ஒரு நாளைக்கு 1000 கடவுச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
