யாழில் தனித்துவாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
யாழ் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை
வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும்,கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே அவர் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
