கடும் மழை வான் பாயும் நீர்தேக்கங்கள் : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 13 க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (26) இரவு 8.00 மணி நிலவரப்படி நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட விபரம் வருமாறு:
தெதுரு ஓயா நீர்த்தேக்கம்: 8 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 15,700 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
தப்போவ நீர்த்தேக்கம்: 8 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 3,520 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இங்கினிமிட்டிய நீர்த்தேக்கம்: 2 கதவுகள் தலா 2 அடி வீதமும், மற்றும் 2 கதவுகள் தலா 1 அடி வீதமும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,000 கன அடிக்கும் அதிகமான நீர் மீ ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
ராஜாங்கனை நீர்த்தேக்கம்: 10 வான் கதவுகள் தலா 4 அடி வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 8,880 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அங்கமுவ நீர்த்தேக்கம்: 2 வான் கதவுகள் தலா 4 அடி வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,440 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, இந்த வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றப்படலாம் என்பதால், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடும்.
எனவே, இந்த நீர்த்தேக்கங்களின் கீழ்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஆறுகளின் நீர்மட்டம் குறித்து விழிப்புடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |