இயல்பு நிலைக்கு திரும்பும் நீர்தேக்கங்கள்: இனி அச்சம் தேவையில்லை!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது எந்தவொரு நீர்தேக்கமும் வெள்ள மட்டத்தில் இல்லை என நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் இவ்விடயம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நீர்ப்பாசன பணிப்பாளர், நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
மழைவீழ்ச்சி
கடந்த 24 மணி நேரத்தில் பல முக்கிய நீர்த்தேக்கங்களில் அதிகபட்சமாக 50-100 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, களனி மற்றும் களு கங்கைப் பகுதிகளில் 50-100 மில்லிமீட்டர் மழையும், ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கைப் பகுதிகளில் 50 மில்லிமீட்டர் மழையும், அத்தனகலு ஓயாவில் 50 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |