சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல்

Mullaitivu University of Jaffna
By Vanan Sep 29, 2023 05:41 PM GMT
Report

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகல் வழிகோலுவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் 23.09.2023 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளதோடு, நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்” என்னும் செய்தி வெளிவந்து நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது.

மற்றுமொரு கரும்புள்ளி

குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியமை என்பது அப்பட்டமாக சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும்.

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் | Resignation Of Mullaitivu Judge Jaffna University

குருந்தூர்மலை வழக்கில் தொல்பொருட் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி விகாரை கட்டுமானம் தொல்பொருள் பணிப்பாளரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது.

அவ்வாறிருக்க இத் தீர்ப்பினை மாற்றியெழுத சட்டமா அதிபரினால் நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது எனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாகவிருந்தது.

குருந்தூர்மலை வழக்கு மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட உறுதித்தன்மையோடிருந்த நீதிபதி அவர்களை “தமிழ் நீதிபதி”என்று அடையாளமிட்டு நாடாளுமன்றத்தில் விமர்சிக்கும் பொழுதே சிறிலங்கா நீதித்துறையின் சுயாதீனம் விமர்சனத்திற்குள்ளாகி விட்டது.

அதேவேளை, நீதிபதிக்குரிய காவல்த்துறைப் பாதுகாப்பு குறைக்கப்பட்டதோடு, அவர் சிறிலங்கா புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டார் எனும் செய்தியானது அப்பட்டமாக நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கியதோடு, நீதியையும் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளது.

சிறிலங்காவில் நடந்தேறிய இச் சம்பவங்கள் நீதித்துறைச் சுயாதீனத்தில் ஒரு அங்கமான நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வியினை தோற்றுவித்துள்ளதோடு, நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசியல் மற்றும் புற காரணிகளின் அழுத்தம் தொடந்தும் இருக்கின்றமையினையும் உறுதிசெய்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இச் சம்பவம் ஒரு விடயத்தினை சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றது, அதாவது தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலைக்கான நீதி சிறீலங்கா நீதித்துறையால் சாத்தியப்படாது என்பதுவேயாகும்.

இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி

தமிழ் மக்கள் உள்ளக விசாரணையையும் நீதிப் பொறிமுறையையும் நம்பமுடியாது என்பதை இது உறுதி செய்கின்றது, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது.

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் | Resignation Of Mullaitivu Judge Jaffna University

இங்கு தமிழ்மக்களிற்கு ஏற்பட்ட பாதிப்பை விட, நீதித்துறைக்கு பாரிய அநீதி நிகழ்ந்துள்ளது. இவ்வாறான சூழலில் தான் சிறிலங்கா அரசாங்கம் உலக நம்பிக்கையை வென்றெடுக்கப் போகின்றது.

இங்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்களிற்குரிய நீதியையும் நிவாரணத்தை வழங்கவும் நீதித்துறையில் சுயாதீனத்தன்மையினையும் நம்பகத்தைன்மையை உறுதி செய்யவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது - என்றுள்ளது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021