பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் தீர்மானம் கொண்டுவரப்பட்டமையால் சபையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஆதரவாக10 வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஒருவர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 9:45 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை
இதில் தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி திட்டத்தை எதிர்ப்பதென்று தவிசாளரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 10 ஆதரவு வாக்குகளாலும், எதிராக 4 வாக்குகளும், நடுநிலையாக 5 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்த நிலையில் பிரேரணை நிறைவேறியது.

அதனைத் தொடர்ந்து குடத்தனையில் வரவேற்பு வளைவு கட்டுவதற்க்கான கோரிக்கை விவாதிக்கப்பட்டு அதன் எல்லைப்படுத்தல், உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சபையின் குழு ஒன்று ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அடுத்து மணற்காடு சவுக்கம் காட்டினை சுற்றுலா நோக்க்களுக்காக பருத்தித்துறை பிரதேச சபையிடம் ஒப்படைக்கவெண்டும் என்கின்ற கோரிக்கைகளை உரிய தரப்பிற்கு அனுப்பி சவுக்கம் காட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது என்றும், உட்பட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் - லின்ரன் , காண்டீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |