சிறிலங்காவின் சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka Sagala Ratnayaka
By Beulah Jul 08, 2023 04:59 AM GMT
Report

சிறிலங்காவில் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதேவேளை  சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மருந்துகள் கொள்முதல் செயல்முறை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

சிறிலங்காவின் சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு | Resolution Of Problems Sri Lanka S Health Sector

சுகாதாரத்துறையின் பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பில் துரிதமாகக் கண்டறியுமாறும், அந்தச் சம்பவங்களில் சுகாதாரத் துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஏதேனும் உண்மை இருப்பின், அவற்றை உடனடியாகக் கண்டறிந்து , மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களுக்கும்  இலவச சுகாதார சேவையை எவ்வித தங்குதடையும் இன்றி வழங்குவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சின் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்துவதில் இந்த வருட ஆரம்பம் முதல் பெரும் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிபரின் பணிப்புரைக்கு அமைய நிதியமைச்சு கட்டம் கட்டமாக நிலுவைத்தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இக்கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் செலவுகளுக்கு நிதியளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளர் எவரேனும் பாதிக்கப்பட்டால், காரணம் கூறுவதை தவிர்த்து, நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிபர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதன்போது வலியுறுத்தினார்.    

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025