சுதந்திரக் கட்சியிலிருந்து தயாசிறியை நீக்கும் தீர்மானம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உள்ளிட்டோருக்கு எதிராக தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த அந்த மனுவை பரிசீலித்த, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மைத்திரி தெரிவிப்பு
கடந்த வருடம் செப்டம்பர் 05 அன்று, தயாசிறி ஜயசேகர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
இதேவேளை கட்சியின் அரசியலமைப்பு விதிகளுக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தயாசிறிக்கு கடிதம் மூலம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |