மீண்டும் காப்பாற்றப்பட்ட தமிழர் பிரதேசம்(படங்கள்)
                                    
                    Sri Lankan Tamils
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Navy
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    பொதுமக்களின் காணி சுவீகரிக்கும் முயற்சி
காரைநகரில் சிறிலங்கா கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
காரைநகர் J/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு
அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் , பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழர்களின் பூர்விக காணிகள் படையினருக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டதும் அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.



                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்