சரத்வீரசேகரவிற்கு தமிழர் தரப்பிலிருந்து வந்த பதிலடி

Parliament of Sri Lanka Sarath Weerasekara Tharmalingam Sitharthan
By Sumithiran Jun 22, 2022 07:10 PM GMT
Report

எவ்வகையிலும் ஏற்புடையதல்ல

பௌத்த சிங்கள மக்களே வாழ்ந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை.

சரத்வீரசேகரவிற்கு தமிழர் தரப்பிலிருந்து வந்த பதிலடி | Retaliation Tamil Side To Sarath Weerasekara

பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவர் த.சித்தார்த்தன்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, தமிழ் சமுகத்தை எச்சரிக்கை செய்து, பௌத்த சிங்கள மக்களிற்கும் எல்லையுண்டு, அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

சரத்வீரசேகரவிற்கு தமிழர் தரப்பிலிருந்து வந்த பதிலடி | Retaliation Tamil Side To Sarath Weerasekara

குருந்தூர் மலையில் புத்தர் சிலை

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலையை நிறுவ முயற்சித்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் க.சிவனேசன் தலைமையில் ஒரு போராட்டம் நடத்தி, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. அதைப்பற்றித்தான் வீரசேகர அங்கு தெரிவித்துள்ளார்.

உண்மை நிலைமையை கூற வேண்டுமென்பதாலேயே, இன்றைய விவாதப் பொருளுக்கு வெளியில் சென்று அதை குறிப்பிடுகிறேன். சரத் வீரசேகரவின் பேச்சு ஆக்ரோசமாக இருந்தது. இப்படியானபேச்சுக்கள்தான் இன முறுகலை ஏற்படுத்தி, போரை கொண்டு வந்து, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமான போர் ஏற்பட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.

இன, மத மோதலுக்கு வழிவகுக்கும்

இந்த நிலைமையில் கூட வீரசேகரவின் உரை, இன, மத மோதலுக்கு வழிவகுக்கும். பௌத்த சிங்கள மக்களே வாழ்ந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தொல்லியல் சட்டங்களையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் இவ்வாறு வழிபாட்டுத்தலங்ளை உருவாக்குவது, அங்கு திட்டமிட்டு பௌத்த, சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான கால்கோள்.

இது இனங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து நாட்டை அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமேயொழிய, நாட்டை முன்னேற்றவோ ஐக்கியத்தை கட்டியெழுப்பவோ மாட்டாது.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை.

பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை. அவை தென்னிந்திய “மகாஜான” பௌத்த கலை மரபுக்குரியவை.

சரத்வீரசேகரவிற்கு தமிழர் தரப்பிலிருந்து வந்த பதிலடி | Retaliation Tamil Side To Sarath Weerasekara

இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர் பரணவிதாரண, நந்தா விஜயசேகர,சேனக பண்டார போன்றவர்கள் வடக்கு, கிழக்கு இலங்கையில் காணப்படும் பௌத்த கட்டட கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரியவை என சந்தேகத்திற்கிடமின்றி குறிப்பிட்டுள்ளனர்.

பாலி இலக்கியத்தில் கூட குருந்துமலை “குருந்தலூர்” என குறிப்பிடப்பட்டு அது தமிழ் மக்கள் சார்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். 1815ல் அரச அதிகாரியான லூயிஸ் அவர்கள் தனது அறிக்கையொன்றில் குருந்தலூரில் இந்து ஆலயங்களின் இடிபாடுகளை நந்தியுடன் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது

எது எவ்வாறாயினும் மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது. பௌத்தமதத்தின் தோற்றுவாய் இந்து சமயம் தான். இலங்கையில் பௌத்தம் ஆரம்பத்தில் தமிழர்களாலேயே பின்பற்றப்பட்டது என்பதற்கான சான்றாதாரங்கள் நிறையவுண்டு. பின்னர், சிங்கள பௌத்த நிலைப்பாடு காரணமாகவே அதில் மாற்றம் வந்தது.

உலகில் பல நாடுகளில் பௌத்தம் பின்பற்றப்படுகிறது. அங்கெல்லாம் மொழியுடன் சேர்த்து பேசப்படுவதில்லை. நாம் எந்த மததத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எனது பெயரே அதற்கு சான்று.

தமிழ் மன்னர்களால் வழங்கப்பட்ட பொருளுதவிகள்

தமிழ் மன்னர்களால் பௌத்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட பொருளுதவிகள் தொடர்பாக பல கல்வெட்டு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல சிங்கள மன்னர்கள் சைவ கோயில்கள் கட்டியுள்ளனர். அவர்கள் மதத்தையும், மொழியையும் ஒன்றாக்கவில்லை.

இப்படியான காரணங்களினாலேயே கடந்த கால யுத்தம் ஏற்பட்டது. யுத்தத்தில் நாமும் சம்பந்தப்பட்டோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே வாழ வேண்டுமென இன்று நாம் நம்புகிறோம். அப்படியான நிலைமையை உருவாக்கினால்தான், இன்றைய விவாதப் பொருளான சுகாதார சேவைகள் நெருக்கடி பற்றிய பிரச்சனைகளை பேச வேண்டிய தேவையிருக்காது.

ஒன்றுபட்டு வாழ வேண்டும்

இனியாவது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டை ஆளும் தரப்புக்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அதை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025